• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அறிவியல் வெளியீடு உப குழு`
    புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம் என்ற இலக்குடன் BHEL கிளை முன்னெடுத்த நிகழ்வு 01.01.2025 அன்று BHEL பகுதியில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அறிவியல் வெளியீடு உப குழு`
புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம் என்ற இலக்குடன் BHEL கிளை முன்னெடுத்த நிகழ்வு 01.01.2025 அன்று BHEL பகுதியில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Email :99

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் புத்தகங்கள் விற்பனை செய்தோம்.
நிகழ்வில் மாவட்டத்தின் சார்பில்  செயற்குழு உறுப்பினர்  திரு இளஞ்சேட் சென்னி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இணைச் செயலாளரும், வெளியீடு உப குழு ஒருங்கிணைப்பாளருமான பகுத்தறிவன்.க தொடக்கம் முதல் புத்தக அரங்கு நிறைவு பெறும் வரை BHEL கிளை நண்பர்களுடன் இருந்து துணை சேர்த்தார்.
BHEL கிளை, மிகச் சிறப்பான (முதல் நாள் இரவே புத்தகங்களைப் பெற்றுச் சென்று, புத்தக அரங்கை அமைத்து) வெற்றியை எட்ட திட்டமிட்டது சிறப்பு. BHEL கிளை 
தலைவர் திரு கணேசன் மூர்த்தி அவர்கள், செயலாளர் திரு திருநாவுக்கரசு அவர்கள், பொருளாளர் திரு பிரேம் ஆனந்த் அவர்கள், துணைச் செயலாளர்கள் திரு. சக்கரபாண்டி, திரு.கண்ணன் அவர்கள், துணைத் தலைவர் 
திரு.முருகானந்தம் அவர்கள், ஆகியோர்  காலை முதல் இரவு வரை தமிழ்நாடு அறிவியல் இயக்க புத்தக அரங்கை அர்ப்பணிப்புடன்  காட்சிப்படுத்தினார்கள்.
அதன் பயனாக அதிகளவு புத்தகங்களை, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாடுகளை  மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது, நல்ல வரவேற்பும் கிடைத்தது.    
BHEL கிளை நிர்வாகிகளுக்கும், கிளையில் உள்ள அனைவருக்கும், BHEL தொழிலாள நண்பர்களுக்கும், பொது மக்களுக்கும்,
திருச்சி மாவட்ட அறிவியல் வெளியீடு உப குழு சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
பகுத்தறிவன்.க
ஒருங்கிணைப்பாளர்.   
திரு.வை.சைவராஜு*இணை ஒருங்கிணைப்பாளர்
அறிவியல் வெளியீடு உப குழு
திருச்சிராப்பள்ளி.
திரு.மு.மணிகண்டன்
மாவட்டச் செயலாளர்
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts