தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு காவிரிக் கவித்தமிழ் முற்றம் பாராட்டு!
திருக்குறளைப் போற்றும் வகையில் பல புதிய திட்டங்களை அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காவிரிக் கவித்தமிழ் மாற்றம் பாராட்டுத் தெரிவாத்துள்ளது. கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாடாலின் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பைபர் பாலத்தை திறந்து வைத்தார். அதையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் பயிலரங்கம் தொடங்கப்படும். ஆண்டுக்கு 133 கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தைத் திருக்குறள் வாரமாகக் கொண்டாடப்படும், ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். திருக்குறள் தொடர்பான இந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை வரவேற்கும் விதமாக தமிழ்நாடு அரசிற்கு காவிரிக் கவித்தமிழ் முற்றம் நன்றி தெரிவித்து பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.














