சென்னை புத்தகக் கண்காட்சியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியர் நூல் வெளியீடு!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் லா.சார்லஸ். இவர் எழுதியுள்ள செயற்கை நுண்ணறிவு எனும் நூலினை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் தொடக்கக்காலம் தொடங்கி தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சி வரை மிக நுணுக்கமாக விளக்கும் இந்த நூலில் படிக்க, எழுத, வீடியோக்கள் உருவாக்க என ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலிகள் குறித்து விரிவாக புரிய வைக்கிறது இந்நூல். 49ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் நடைபெற்ற எழுத்தாளர் மருதன் அவர்கள் வெளியிட,

எழுத்தாளரும் பேச்சாளரும், மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணர் முனைவர் சோம. வள்ளியப்பன் அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். நிறைவில் நூலாசிரியர் முனைவர் லா.சார்லஸ் ஏற்புரை வழங்கினார். முனைவர் போ.ஜான்சன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.














