
திருச்சி மாவட்டம் தா.பேட்டை வட்டாரம் தும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கீதா தலைமையில் 31.01.25 நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் கீதா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு குறித்தும் குழந்தைகள் என்பவர் தாயின் கருவறை முதல் பதினெட்டு வயது பூர்த்தியாகும் வரை உள்ளவர்கள் என்றும் குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் வாழ்வதற்கான உரிமை வளர்ச்சிக்கான உரிமை பாதுகாப்பிற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை

மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள்.

ரெபேக்கா குழந்தைகள் பராமரிப்பு இல்ல கண்காணிப்பாளர் ஜார்ஜ் சக்ரவர்த்தி கல்வியின் அவசியம் முக்கியத்துவம் குறித்து வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் சாந்திபிரியா வரவேற்றார் ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார் குழந்தை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.
















