பணிநிறைவு பாராட்டு
••••••••••••••••••••••••••••••••••
31.01.2025
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக அலுவலர் திருவாளர்
அ.பொ.சிவக்குமார்
கவிதை மடல்
••••••••••••••
அவர்தம்
மொத்த அகமும் புத்தகத்தில்
மக்கள் மன மத்தகத்தில்…
சொக்க வைக்கும் வித்தகத்தில்
சோர்விலாத நர்த்தனத்தில்
நாள் தோறும் நூலகத்தில்
நலம் பெருக்கும் ஞானகத்தில்
நூல் பயிலும் மோனகத்தில்
எழுத்து விதை கானகத்தில்
நெஞ்சம் உழும் நேசகர் – நூல்
நெய்து வந்த வாசகர்
சளைத்திடாத சாதகர்- அவர்
இளையோர்க்கு போதகர்
வாசகர்க்கு உபாசகர்
வாழ்க்கைப் பாடம் சொன்னவர்
வழக்கம் மாற்றித் தந்தவர்
கிழக்கை முந்தி எழுந்தவர்
மாவட்ட மைய நூலக அலுவலர்
மாலுமியாகி திசை கண்டவர்
போட்டித் தேர்வு மாணவர்
புன்னகைக்கக் காரண மானவர்
புதிய தடம் போட்டவர் ; மாவட்ட
ஆட்சியர் மனதிலிடம் பிடித்தவர்-புத்தகத் திருவிழாவுக்குப் புதிய முகம் கண்டவர்
திருச்சி நூலகத்தில் திருப்புமுனை தந்தவர்
நிறைந்த பணி நிறைவாக
கனவு வழி நனவாக
அனுபவங்கள் பகிர்வாக
நீடூழி வாழ்வீரே
••••••••••••••••••••••••
“திருச்சியின் ஆளுமை”
கவிஞர் ம. திருவள்ளுவர்.












