பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞ்ர் டாக்டர்
கலைஞர் நூற்றாண்டு விழா அகில இந்திய அளவிலான பெருந்திரளணி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில்
28 – ஜனவரி-2025 முதல்
3 – பிப்ரவரி -2025 முடிய
நடை பெற்று வருகின்றது.

பெருந்திரளணியில் 20,000 சாரண, சாரணியர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்து செயல்பாடுகளை நிகழ்த்தி வருகின்றனர்.பெருந்திரளணிக்கு
சேவைப் பணிக்காக வருகை புரிந்துள்ள சேலம் கல்லூரியைச் சேர்ந்த திரி சாரணர்கள் தங்கள் தனித்திறமையைக் காட்டி வருகின்றனர். தமிழ்மணிஎன்ற மாணவர் ஓவியங்களை எவ்வித பயிற்சிகளும் இன்றி மிகச் சிறப்பாக வரைந்து வருகின்றார்.

பெருந்திரளணிக்கு வருகின்றவர்களின் ஒவியங்களை உடனடியாக வரைந்து காட்டுகின்றார். தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் என பலரின் ஓவியங்களை வரைந்து சிறப்பாக தன் கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றார், செயலர் சங்கர் IAS, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றனர்.

உடன் சாரணமாநில துணை ஆணையர் மருதநாயகம் உள்ளார். சாரணர்கள்தமிழர் கலை பண்பாட்டை பரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
சாரண இயக்கம் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு மிகச்சிறந்த இயக்கம் என்பதை நிருபித்து வருகின்றது.















