தமிழ்நாடு

“கதவுகள் மூடியும் கல்வி திறந்த கதவுகள்”.

Email :58

“கதவுகள் மூடியும் கல்வி திறந்த கதவுகள்”

ஆக்கம்
எஸ். சிவகுமார் முதல்வர் (பணி நிறைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்
Mob.807 222 6768

திருநெல்வேலி மாவட்டத்தில் 15 மாதங்களுக்கு முன் சுய கற்றல் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் தனியாக   புத்தகம் எடுத்து படித்தார்கள்.

பெற்றோர்கள் தங்கள் பணி முடித்து வந்து குழந்தைக்கு துணை நின்றனர்.

பள்ளி முடிந்த பிறகு, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில், காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை காலங்களிலும் கூட குழந்தைகள் தொடர்ந்து படிக்கத் தொடங்கினர்.

ஆசிரியர்கள் நேரடியாக இல்லாமல் WhatsApp மூலம் கண்காணித்தனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் ஆடியோ, வீடியோவை குழுவில் பகிர்ந்து ஊக்கம் அளித்தனர்.

இந்த நிலையான பயிற்சியால் குழந்தைகள் நாளுக்கு நாள் மேம்பட்டனர்.

ஆர்.சி. தொடக்கப்பள்ளி, இலங்குளம் – இங்கு ஒரு சின்ன வீடு. அந்த வீட்டின் கதவு பல நேரங்களில் மூடியிருந்தது. ஆனால் அந்த கதவுகள் மூடியிருந்தாலும், கல்வியின் கதவுகள் எப்போதும் திறந்திருந்தன. குழந்தைகள் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்கள்

குழந்தைகள் உணர்ந்தார்கள் – “வாழ்க்கையின் உண்மையான திறவுகோல் கல்விதான்.”
அவர்கள் தொடர்ந்து படித்தார்கள்.

ஒருநாள் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆச்சரியமடைந்தனர் – சுய கற்றலில் வளர்ந்த குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் ஒளிவிடத் தொடங்கினார்கள்.

இலங்குளத்தின் இந்தச் சிறு முயற்சி, இன்று முழு சமூகத்துக்கும் ஒரு செய்தியைத் தருகிறது :

👉Consistency தான் வெற்றியின் சாவி.
👉 சுய கற்றல் தான் கல்வியின் உயிர்நாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts