இன்று 11.03.2025 ஆவூர் நூலகத்திற்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திருமதி சகாய மேரி (நூலக நண்பர்) மற்றும் திருமதி சந்தியா சலோமி ஆகியோர் வருகை தந்தனர்.
ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தர்ஷன் ரிகாஸ் என்ற மாணவர் ஆவூர் நூலகத்திலிருந்து சிறுவர் கதைகள் எடுத்து வாசித்து கதை கூறினார். மேலும் தான் வாசித்த கதையிலிருந்து கதையின் கருத்தை வைத்து ஓவியங்கள் வரைந்தார்.
செல்லம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் ஏகன் என்ற மாணவர் ஆவூர் நூலகத்தில் உள்ள மாணவர்களுக்குக்கான Young world Magazine ஐ எடுத்து வாசித்து கதை கூறினார்.
மேலும் இதில் உள்ள தகவல்களை மிகவும் அழகாக எடுத்துரைத்தார்.
ஆவூர் அரசு உதவி பெறும் ஆர். சி. துவக்கப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் கவின் டேவிட்சன் என்ற மாணவர் ஆவூர் நூலகத்தில் உள்ள சிறுவர் கதை புத்தகம் எடுத்து வாசித்தார்.
மேலும் ஆவூர் அரசு மேல்நிலைப் மாணவர்கள் ஆடன், ஆல்விஸ் மற்றும் செல்லம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் அஸ்வின்
ஆகியோர் கதைகள் வாசித்தனர்.
நூலககத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் திரு. ரா.சேவியர் அவர்கள் இன்று ரூ. 1000/- செலுத்தி தன்னை ஆவூர் நூலகத்தில் புரவலராக இணைத்துக் கொண்டார்.
மாணவர்களுக்கு ஆவூர் நூலகம் சார்பாக புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
நன்றி.
ப. நாகலெட்சுமி,
நூலகர்,
ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம்.
