
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் ஐந்தாம் நாளாகிய (17/02/2024) இன்று மணச்சநல்லூர் கிராமத்தில் காலை 9.30 மணியளவில் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக தூய வளனார் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜோ. அற்புத சகாயராஜ் அவர்கள் கலந்து கொண்டு மனிதனின் சுற்றுப்புற சீரழிவின் பங்கு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும்
சுற்றுசூழல் மாசு, நிலநடுக்கம், தட்பவெப்பநிலை மாற்றம் குறித்தும் மாணவிகளுக்குப் பயனுள்ள கருத்துக்களை வழங்கினார்.
நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் குறித்து விழிப்புணர்வு பேரணியானது நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளால் நடத்தப்பட்டது. மேலும் சுற்றுப்புற தூய்மை, பேரிடர் மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் மாணவிகள் மக்களுக்கு புரியும் விதமாக எடுத்துரைத்தார்.

மேலும் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வரை படங்களோடு கூடிய வகுப்புகள் எடுத்தனர். விளையாட்டுப் போட்டிகள் வைத்து ஊக்கப்படுத்தினார். பள்ளியைத் தூய்மை செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.

மண்ணச்சநல்லூர் கிராமத்தில் சுற்றுப்புற த் தூய்மை, கிராமப்புறத்தில் மேம்படுத்துதல், பெண்கள் பாதுகாப்பும் சுயதொழில் முன்னேற்றமும் குறித்து விழிபுணர்வினை ஏற்படுத்தினர்.
மதியம் இந்திய கடற்படை மேலாளர் தலைமை அதிகாரி திரு. ஜே.சௌந்தரராஜன் அவர்கள் கலந்து பசுமை மேலாண்மை குறித்து சிறப்புரையும் மாணவிகளுக்கு வழங்கினார்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர் பி.மெர்லின் கோகிலா அவர்கள் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்கும் விதமாக நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார். மேலும் சு. கீர்த்தனா இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையின் மாணவி நன்றியுரை ஆற்றினார்.















