தேசிய குடற்புழு தினம்: திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழக அரசின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் தேசிய குடற்புழு தினம் (10.02.2025) சுகாதாரத் துறையின் மூலம் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சண்முகா நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்களுக்கு குடற்புழுவின் தாக்கம் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
குடற்புழு தொற்றினால் இரத்தச்சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சியில் தடங்கல், மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் உருவாகும் என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டனர். இதைத் தவிர்க்கும் வகையில், பள்ளி மாணவர்கள் தங்கள் சக நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்வை பள்ளி தலைமை ஆசிரியை
துரை. ஜெயபாக்கியம் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் வி. ஆனந்த வள்ளி, கோ. ஜெயந்தி ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டினர். கலந்துரையாடலில் மாணவிகள் சுகப்பிரியா மற்றும் பவானி ஸ்ரீ சிறப்பாக பங்கேற்று, குடற்புழு தொற்றின் தாக்கங்களை விளக்கினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வு மாணவர்களிடையே சுகாதாரப்பொறுப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் ஆரோக்கியமாக வளர உதவியுள்ளது.














