• Home
  • தமிழ்நாடு
  • சிறப்பு விருந்தினராக முனைவர் ஜாப்னீஸ் பிரவீன் பீகி அவர்கள் கலந்து கொண்டு பாலின மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு விழிப்புணர்வினை மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு

சிறப்பு விருந்தினராக முனைவர் ஜாப்னீஸ் பிரவீன் பீகி அவர்கள் கலந்து கொண்டு பாலின மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு விழிப்புணர்வினை மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

Email :118

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் ஆறாவது நாளாகிய இன்று 18/02/2025 மணச்சநல்லூர் கிராமத்தில் காலை 9.30 மணியளவில் தொடங்கியது.

சிறப்பு விருந்தினராக  முனைவர் ஜாப்னீஸ் பிரவீன் பீகி அவர்கள் கலந்து கொண்டு பாலின மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு விழிப்புணர்வினை மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டெங்கு காய்ச்சல், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், சுற்றுப்புற சூழலின் தூய்மை, நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்தும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம், பெண் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாணவிகள் நடத்தினர்.
இதனால் மக்கள் பலர் பயனடைந்தனர்.

மேலும் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகள் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்தனர். விளையாட்டுப் போட்டிகள் வைத்து  ஊக்கப்படுத்தினார். 250 நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் முகாமில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர்  பி.மெர்லின் கோகிலா அவர்கள் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்கும் விதமாக நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார். மேலும் சு. கீர்த்தனா இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையின் மாணவி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts