மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலையடிவாரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும்,வீடுகளுக்கு பயனளிக்கும் இயற்கை வள வளர்ச்சியையும் வலியுறுத்தும் வகையில் கொய்யா,மாதுளை,நொல்லி உள்ளிட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் மற்றும் நிர்வாகிகள்,டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவும்,சமூக முன்னேற்றத்திற்காகவும் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தனர். மரக்கன்றுகள் நடுவதன் மூலம் அவரது சிந்தனைகள் தொடர்ந்து தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.














