செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணிதவியல் மாணவர்களுக்கு மூலிகை கண்டறிதல் பயிற்சி!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணிதவியல் பயிலும் அறிவியல் தமிழ் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு மூலிகைகளைக் கண்டறிதல் வகுப்பு நடைபெற்றது. கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மூலிகைத் தோட்டத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு செப்பர்டு விரிவாக்கத் துறையின் மூத்த ஒருங்கிணைப்பாளர் திரு.சி.ஜெயச்சந்திரன் சிறப்பு விருந்தினராக வருகை தந்து வகுப்பை வழி நடத்தினார். மூலிகைத் தோட்டம் ஏன் அமைக்கப்படுகிறது?, மூலிகைத் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மூலிகையின் தனித்துவம் யாது?, ஆங்கில மருத்துவத்திற்கும் தமிழ் மருத்துவத்திற்கான தொடர்பு என்ன?,

ஆங்கில மருத்துவத்திற்கும் தமிழ் மருத்துவத்திற்குமான வேறுபாடு என்ன? நாம் ஏன் மூலிகைகளை கொண்டாட வேண்டும்? தமிழர்களின் வாழ்வியலின் ஒரு பகுதியாக மூலிகைகள் அமைந்திருந்தன உணவே மருத்துவம் மருந்தே உணவு என்பது தமிழர்களின் அடிப்படையான வாழ்வியல் நெறி என்கிற மைய பொருளை விளக்கி, பல்வேறு மூலிகைகள் குறித்த பயிற்சியை வழங்கினார். தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள் முனைவர் சி.ஆரோக்கிய தன்ராஜ் மற்றும் முனைவர் ஜா.சலேத் இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.














