தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பள்ளிகள் அளவில் துவங்கி மண்டலம் அடுத்து மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடக்க உள்ள சதுரங்க போட்டிகளில் பங்கேற்க உள்ள திருவானைக்காவல் மேலக்கொண்டயம்பேட்டை பகுதியில் உள்ள “மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில்” படிக்கும் மாணவ மாணவிகளுக்கு

எனது இனிய நண்பர் “செஸ் மாஸ்டர்” திரு. C.S. சங்கரா அவர்கள் பள்ளி வளாகத்தில் இலவசமாக பயிற்சியளித்தார்கள்.
இவர் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாரம்தோறும் மாணவ மாணவியர் பலருக்கும் பல ஆண்டுகளாக இலவசமாக சேவை மனப்பான்மையுடன் பயிற்சியளித்து வருகிறார்.

மேலும் இவர் மாநில அளவில் செஸ் போட்டியில் பங்கு பெற்ற பலருக்கு பயிற்சி அளித்து வெற்றி பெற செய்தவர் ஆவார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இவரது பயிற்சி சர்வதேச தரத்தில் இருந்ததால் புதுமையாகவும் வியப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

இவர் தொடர்ந்து செஸ் பயிற்சி வழங்கவும் சம்மதித்தது அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. சேவை உள்ளம் கொண்ட நண்பர்

திரு.சங்கரா.C.S அவர்களுக்கு பள்ளி சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
வி.வே.விஸ்வேஸ்வரன்
திருவானைக்காவல்.














