இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக குழந்தைகள் பயன்படுத்துவதற்காக இலவசமாக பாய் வழங்கப்பட்டது.

இதில் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 10 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்துஅந்த மையங்களுக்கு இலவச தரை விரிப்பான் வழங்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணித்துறை திருச்சிராப்பள்ளி மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.மா. நித்யா அவர்கள் வழியாகவும் மற்றும் மணிகண்டம் ஒன்றியம் திட்ட அலுவலர் திருமதி .பரிமளா அவர்கள் வழியாக காந்திநகர் அங்கன்வாடி

மையம்,நாராயணபுரம் மேள நாகமங்கலம் அங்கன்வாடி மையம்,எடமலைப்பட்டி அங்கன்வாடி மையம்,அடுக்குமாடி குடியிருப்பு வீரன் மாநகர் ஆகிய பகுதிகளில் சில்ட்ரன் சாட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் திரு .ராபின்சன் அவர்கள் ஒருங்கிணைத்து தரை விரிப்பான் ஆனது வழங்கப்பட்டது.














