• Home
  • தமிழ்நாடு
  • தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!
தமிழ்நாடு

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!

Email :108

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா திருச்சி தளவாய் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது.

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில்15.02.25 அன்று நடந்த இளையோருக்கான தடகள போட்டியில் தனி பிரிவில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு (Commandant of Police TSP 1 BN Trichy) கமாண்டர் ஆப் போலீஸ் எம்.ஆனந்தன் அவர்கள் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, உதவி செயலாளர் எம். கனகராஜ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், போலீஸ் அதிகாரிகள், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts