அருள்மிகு கண்ணப்பர் நாயனார் குரு பூசை வழிபாடு உலககெங்கும் வாழும் ஆன்மீக மெய்யன்பர்களால் நேற்று 08-02-2025 கொண்டாடப்பட்டது.

அருள்மிகு கண்ணப்பர் நாயனார் ,வேடர்குல தலைவனாக இருந்த போது ,சிவ பெருமானின் கண்ணில் இருந்து வழிந்த குருதியை நிறுத்தும் பொருட்டு தன் கண்னையே ஈசனுக்கு அர்ப்பணித்தவர்.

உலக வரலாற்றில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்தவர் அருள்மிகு கண்ணப்பர் நாயனாராகும். ஈசனுக்கே கண் தானம் செய்து, உடல் உறுப்பு தானத்தை தொடங்கி வைத்தவர்.

கண்ணப்பர் நாயனார் ஆவார். அத்தகைய பெருமை மிக்க அருள்மிகு கண்ணப்பர் நாயனார் குரு பூசை வழிபாட்டினை,திருச்சியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக ,திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சன்னதியில் அருள்பாளிக்கும் கண்ணப்பர் நாயனாருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.இவ் வழிபாட்டு விழாவில் பேராசிரியர் சந்திரசேகரன், கவிஞர் லோகநாதன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கண்ணப்பர் வழிவந்த முத்தரையர் சமூகத்தினர் பலரும் இக்குருபூசை வழிபாட்டினை தமிழகம் முழுவதும் மேற்கொண்டனர்.

இவ்வழிபாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் நிருபர்களிடம் பேசும் போது ,அருள் மிகு கண்ணப்பர் நாயனார் தான் உடல் உறுப்பு தானத்தின் முன்னோடி ,ஆகவே உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு தமிழக அரசும்,மத்திய அரசும் அருள் மிகு கண்ணப்பர் நாயனார் பெயரில் விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.மேலும் கண்ணப்பர் நாயனார் குரு பூசை வழிபாட்டினை அரசு விழாவாகா கொண்டாட வேண்டும்.அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.














