• Home
  • தமிழ்நாடு
  • அரசுப் பள்ளிக் குழந்தைகளின்
    நெகிழ்ச்சியான செயல்பாடுகள்.
    இன்று 04.03.2025 ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  நூற்றாண்டு விழா!
தமிழ்நாடு

அரசுப் பள்ளிக் குழந்தைகளின்
நெகிழ்ச்சியான செயல்பாடுகள்.
இன்று 04.03.2025 ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  நூற்றாண்டு விழா!

Email :117

அரசுப் பள்ளிக் குழந்தைகளின்
நெகிழ்ச்சியான செயல்பாடுகள். இன்று 04.03.2025 ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்
நூற்றாண்டு விழா கண்காட்சி நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
மேடை ஏறிய முதல் வகுப்பு மாணவி ஜீவிதா
அப்பா பற்றிய அழகிய கவிதையை வாசித்துக் காட்டினாள். முதல் வகுப்பு மாணவி தானே ஒப்பிப்பாள் எனக் கருதி எழுத்தெழுத்தாக வாசிக்க சொன்னபோது வாசித்துக் காட்டினாள். முதல் வகுப்பு மாணவி எழுத்தை அறிந்து உணர்ச்சியோடு கவிதையை வாசித்தது ஆச்சரியம். இக்கவிதையை எழுதிய ஆசிரியர் மேடைக்கு வாருங்கள் என அழைத்தால் அவள் அக்கா சஹானா மேடைக்கு வருகின்றாள் ஐந்தாம் வகுப்பு மாணவி அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அவளிடம் எழுதிய நீ வராமல் தங்கையை ஏன் அனுப்பி வைத்தாய் என்றால்

தங்கையை ஊக்குவிக்கு மேடைக்கு அனுப்பி வைத்ததாக கூறுகின்றாள்.
தன் திறமையைக் கூட பிறருக்கு அர்ப்பணிக்கும் தியாக உள்ளம். ஐந்து வயதில் மேடை ஏறும் தைரியம் என வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைக் கற்பித்து இன்று அரங்கேறியது வெறும் செயல் அன்று குழந்தைகள் அடைய வேண்டிய திறன்களாய் உலக அறிஞர்கள் சொன்னதை செய்து காட்டிய செல்வங்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். கவிதைக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டபோது என்னிடம் எல்லாம் உள்ளது உங்கள் வாழ்த்து போதும் என்று அக்குழந்தை சொன்னது பெரியர் வர்களுக்கான பாடமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts