திருச்சி செயின்ட் தூய வளனார் கல்லூரி மற்றும் செப்பர்டு விரிவாக்கத்துறை இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்களால் திருச்சி அளுந்தூர் பள்ளப்பட்டி என்னும் கிராமத்தில் சிறப்பு சுகாதாரத் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி என்று சுமார் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.


இதில் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் தூய்மை கடைப்பிடிப்பு பற்றி சிறப்பு விருந்தினராக உதவிப் பேராசிரியர் ஆனி ரோஸ் அவர்களும் மற்றும் செப்பர்டு இளைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. யசோதை அவர்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் அவரவர் வீட்டில் உள்ள குப்பைகளை சரிவர பராமரித்தாலே நமது கிராமம் முழுவதும் தூய்மையாக இருக்கும் என உரையாற்றினாரகள்.


மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து போடுவதற்கு வசதியாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் குப்பை தொட்டி வழங்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து வழி நடத்தினார்கள்.















