ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளி “அறிவியல் மற்றும் எண்ணும் எழுத்தும்” விழா கொண்டாட்டம்!
ஸ்ரீரங்கம், மார்ச் 4, 2025:
டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா சார்பாக “அறிவியல் மற்றும் எண்ணும் எழுத்தும்” என்ற கண்காட்சியுடன் விழா தொடங்கியது.
விழாவில் வரவேற்புரை வழங்கியவர் பள்ளி தலைமையாசிரியர் திருமதி ப்ளோரா லில்லி.

சிறப்பு விருந்தினர்களாக அந்தநல்லூர் சரக கல்வி அலுவலர்கள் திரு. K மருதநாயகம் (BEO) மற்றும் திரு. ஸ்டாலின் ராஜசேகர் (BEO) கலந்து கொண்டு, பள்ளியின் வளர்ச்சியை பாராட்டினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு. எஸ் சிவக்குமார் (பணி நிறைவு), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம், பள்ளியின் நூற்றாண்டு சாதனைகளை பாராட்டி, குழந்தைகளின் தன்னிச்சை கற்றலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களான திரு V. ஜவகர், திருமதி செல்வி, திருமதி ராதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, பள்ளியின் சமூக சேவை மற்றும் கல்வி பங்களிப்பை எடுத்துக்காட்டினர்.
பூமி பவுண்டேஷனின் திரு சௌந்தர் விழாவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
நன்றி உரை ஆசிரியர் திருமதி லட்சுமி, வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், செய்திருந்தனர்
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர் .
நூற்றாண்டு விழா நிகழ்வுகள், பள்ளி மற்றும் சமூகத்தின், கல்வி வளர்ச்சிக்கான புதிய தொடக்கமாக அமைந்தது.















