• Home
  • தமிழ்நாடு
  • “சுய கற்றல்(Self Learning) மற்றும் தொடர்ந்து கண்காணிக்கும் ஆசிரியர்கள்”, “குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை”.
தமிழ்நாடு

“சுய கற்றல்(Self Learning) மற்றும் தொடர்ந்து கண்காணிக்கும் ஆசிரியர்கள்”, “குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை”.

Email :129

சுய கற்றல்(Self Learning) மற்றும் தொடர்ந்து கண்காணிக்கும் ஆசிரியர்கள்”, “குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணை”

ஆக்கம்: S. சிவக்குமார், முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம். Mob. 6383690730.

திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சுய கற்றல் (Self Learning) முறை மூலம் குழந்தைகள் வகுப்பில் கற்றதை நிலைப்படுத்த, ஆசிரியர்கள் பெற்றோர்களின் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

குழந்தைகள் வீட்டில் கற்றலை உறுதி செய்யும் விதமாக, சுய கற்றல் முறைகள் சிறந்த தீர்வாக அமைகின்றன.

தொடர்ந்து கண்காணிக்கப்படும் குழந்தைகள், கல்வியில் அதிக முன்னேற்றம் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர்கள் தங்களது நேரத்தை பயன்படுத்தி, தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகங்கள் (WhatsApp), அல்லது நேரில் பார்வையிடுதல் போன்ற முறைகளின் மூலம், குழந்தைகள் வீட்டில் படிப்பதை உறுதி செய்கிறார்கள்.

சுய கற்றல் வழியில், குழந்தைகள் தாங்களாகவே பாடங்களை புரிந்து கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

இதற்கு கூடுதல் செலவோ, அதிக உழைப்போ தேவையில்லை; தொடர்ந்து கண்காணிக்கும் எளிய நடவடிக்கைகள் போதுமானவை.

தொடர்ச்சியான கண்காணிப்பு குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை வலுப்படுத்தும். ஆசிரியர்கள் குழந்தைகள் வீட்டில் படிக்கிறார்களா என்பதை உறுதி செய்தால், அவர்களின் படிப்பு நிலைத்து நிற்கும்,” என்பதால் இந்த முறையை ஆசிரியர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

இந்த கற்றல் முறைகளை பள்ளித் திட்டங்களில் இணைத்து, ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டால், அனைத்து குழந்தைகளும் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


“குழந்தைகள் படிப்பை விரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தாங்களாகவே புத்தகங்களைத் திறந்து படிக்கத் தொடங்கி உள்ளார்கள். அதற்குக் காரணம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான வழிகாட்டுதலே,” என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts