• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு மூலிகைகளைக் கண்டறிதல் வகுப்பு!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு மூலிகைகளைக் கண்டறிதல் வகுப்பு!

Email :178

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு மூலிகைகளைக் கண்டறிதல் வகுப்பு!
உலக மருத்துவங்களில் முதன்மையானது தமிழர்களின் மூலிகை மருத்துவம் என்றால் அது மிகையானதல்ல.

இன்றைய அறிவியல் வளர்ச்சியிலும் பண்டைய தமிழர்களின் மூலிகை மருத்துவ பயன்பாடும், உணவே மருந்து என்கிற கலாச்சாரத்தில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்ட பாங்கும் வியக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

தமிழர்களின் பண்பாட்டில் இரண்டறக் கலந்து இருக்கிற மூலிகை மருத்துவம் இன்றைய சூழலில் மறைந்து கிடக்கிறது என்பதை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மூலிகைத் தோட்டத்தில் நடைபெற்ற இந்த வகுப்பௌ, செப்பர்டு விரிவாக்கத்துறையின் மூத்த ஒருங்கிணைப்பாளர் திரு சி.ஜெயச்சந்திரன் இந்த வகுப்பை வழி நடத்தினார்கள். 

அரத்தை, கற்றாழை, குறிஞ்சாக்கீரை, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட பல மூலிகைகளை கண்டறிந்து அவற்றுக்கான மருத்துவ குணங்களை அறிந்து கொண்டனர். தமிழாய்வுத் துறை தலைவர் முனிவர்  முனைவர் ஞா.பெஸ்கி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வகுப்பில் இரண்டாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்களுடன் முனைவர் ஜா.சலேத் உள்ளிட்ட பேராசிரியர்களும் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

– ஆதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts