திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் 76 வது குடியரசு தின விழாவில் ஆசிரியருக்கு பாராட்டு!
76வது குடியரசு தின விழா திருநெல்வேலி மாவட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில், நாங்குநேரி வட்டாரம், இலங்குளம் ஆர்.சி. பள்ளியின் தலைமை ஆசிரியை செ. செல்வக்கனி அவர்களின் கல்வி பணிகளை பாராட்டி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை ஆசிரியைக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
பள்ளி கல்வியில் மாணவர்களின் வளர்ச்சிக்கு , மற்றும் கல்வியில் புதுமைகளை புகுத்தி , பள்ளி நிர்வாகத்திலும் முக்கிய பங்காற்றி வருகிறார். இவரது பணி மாவட்ட அளவில் பாராட்டுக்கு உரியதாக விளங்கி வருகிறது.













