• Home
  • தமிழ்நாடு
  • மேம்பாட்டு வினையகம் (PDI) திருச்சி பகுதியில் உள்ள முசிறி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் “இலக்கு மக்கள் ஒன்றுகூடல் கலை நிகழ்ச்சி 2025” நடைபெற்றது.
தமிழ்நாடு

மேம்பாட்டு வினையகம் (PDI) திருச்சி பகுதியில் உள்ள முசிறி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் “இலக்கு மக்கள் ஒன்றுகூடல் கலை நிகழ்ச்சி 2025” நடைபெற்றது.

Email :129

22.03.2025 அன்று மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) திருச்சி பகுதியில் உள்ள முசிறி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் “இலக்கு மக்கள் ஒன்றுகூடல் கலை நிகழ்ச்சி 2025” நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் திரு.முத்துகுமார் திட்ட மேலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் சிறப்புவிருந்தினர்கள்  மரு.ரமேஷ், உதவி மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை,முசிறி,  திருமிகு.புஷ்பலதா, ICTC மேற்பார்வையாளர், DAPCU திருமிகு.லாவண்யா, சமூக ஆர்வலர், துறையூர், மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.

மேலும் இணைந்து சிறப்பித்த திருமிகு.புஷ்பம், ICTC ஆலோசகர், முசிறி. திரு.பாலச்சந்திரன் NTEP-STS, முசிறி மற்றும் திருமிகு.சசிகலா ஆய்வக நுட்புனர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் HIV/AIDS திட்டம் பற்றியும் அதன் செயல்பாடுகள் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறப்பட்டது. மேலும் TB,NCD தொற்று பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

இதில் 160 க்கும் மேற்பட்ட விளிம்புநிலை பெண்கள் மற்றும் திருநங்கைகள் கொண்டனர். முடிவில் திரு.முரளி முன்மாதிரி கல்வியாளர் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சி திருமிகு.ரம்யா கணக்காளர் மற்றும் பகுப்பாய்வளர் அவர்கள் தொகுத்து வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts