கல்வி வளர்ச்சியில்
தமிழக அரசின் திட்டம் “இல்லம் தேடிக் கல்வி, தாயனூர்”. திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் தாயனூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் தொடக்கப்பள்ளி ஒன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்த கிராமத்தில் வசிக்கும் திரு. R. ராஜமாணிக்கம் தன் கிராம குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இல்லம் தேடி கல்வியை ஒருங்கிணைத்து உதவி வருகிறார்.

இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
விடுமுறை காலங்களில் பெற்றோர்கள் ஒத்துழைப்போடு வழங்கப்படுகிறது.
50 குழந்தைகளும் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார்கள். திருமதி ஷர்மிளா M.A ( பரதநாட்டியம்) சமூக ஆர்வலர் பயிற்சி அளிக்கிறார்.
திருச்சி ரோட்டேரியன் திருமதி கண்ணாத்தா பயிற்சி மையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலைகள் குழந்தையின் மனநிலை மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பரதநாட்டியம்- குழந்தைகளுக்கான பயன்கள்: பரதநாட்டியத்தில் உள்ள குறிப்பிட்ட அடிகள் மற்றும் Mudras (முத்திரைகள்) குழந்தையின் கவனத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இது மன அமைதியை ஏற்படுத்தி மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தன்னம்பிக்கை வளர்க்கும் :
பரதநாட்டியம் ஆர்வத்தை தூண்டுகிறது. நாடக பாவங்கள் (Expressions) மற்றும் தாளம் (Rhythm) குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன.
பரதநாட்டியத்தின் ஒழுங்கான பயிற்சிகள் குழந்தைகளை ஒழுக்கம், பொறுப்புணர்வு, மற்றும் நேரக்கட்டுப்பாட்டிற்கு பழக்கவழக்கப்படுத்துகின்றன.
கலை சிந்தனை மற்றும் படைப்பாற்றல்:
இது குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும்.
உடல் ஆரோக்கியம்: பரதநாட்டியப் பயிற்சிகள் உடல் இயக்கத்தை (Physical Coordination) மேம்படுத்துவதுடன், உடல்நலத்தையும் சுறுசுறுப்பையும் மேம்படுத்துகிறது.


சமூகக் கற்றல்: பரதநாட்டியத்தின் மூலமாக கலாசார அறிவும், பாரம்பரியப் பாசமும் குழந்தைகள் இடத்தில் வளர்க்கப்படுகிறது.
கற்றல் வெளிப்பாடுகள்: குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மன அமைதியுடன் தங்களின் படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றி காண முடியும்.


எனவே, பரதநாட்டியத்தை ஒரு சிறந்த மனநல கலைவழி கருவியாகப் பயன்படுத்தலாம்.
ஆக்கம்:
எஸ் சிவக்குமார் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
Mob. 6383690730














