• Home
  • உலகம்
  • பல்கிப் பெருகி பரவி வெல்லும் தமிழ்த் திருமணம்!
உலகம்

பல்கிப் பெருகி பரவி வெல்லும் தமிழ்த் திருமணம்!

Email :203

பல்கிப் பெருகி பரவி வெல்லும் தமிழ்த் திருமணம்,
இதுவே சிறந்த திருமணம்,  அருமையான விளக்கம், ஆர்ப்பாட்டாமில்லாத தெளிந்த திருமணம் என வருகை தந்தார் போற்ற, மனம் நிறைவாய் இருந்தது.

மிகச் சிறப்பு என மணமக்களின் பெற்றோர் மகிழ்த்துரைக்க உங்கள் தொடர்பெண் தரவியலுமா வரும் ஆண்டு இல்லத்திலும் இவ்வாறே எம் பிள்ளைக்குத் தி்ருக்குறள் ஓதி விளக்கம் செய்து திருமணம் செய்துவிக்க விரும்புகின்றோம் எனச் சிலர் தொடர்பெண்ணை மகிழ்வுடன் வேண்ட புரியாத  ஆரிய மொழித் திருமணம் நமக்கெதற்கு நம் தாய்மொழியாம் தமிழில்

நடத்தப்படும்  தமிழ்த்திருமணமே நமக்கு வேண்டும் என  உணர்வாளர் உறவாளர் உவந்து கூற நான் இன்று சுங்கைப் பட்டாணி பாலி அரங்கில் சிறிதரன் யோகேசுவரி இணையருக்கு அருந்தமிழில் திருக்குறள் ஓதி தமிழ்த்திருமணம் நடத்தி வைத்தேன்.

வரும் ஆண்டுக்குரிய பதிவுகளும் இக்கால் பல்கி வருகின்றன. தமிழ்த்திருமணம் புரியும் இக்காலத்து இளையோரைப் போற்றுவோம்.. மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!
இரா. திருமாவளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts