கல்வியில் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டம்.
சுய கற்றல் மையம்
(Self- Learning Center)
செலவில்லா கல்வி திட்டம் (Zero Cost)
எஸ் சிவக்குமார் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.
காஞ்சிபுரம் மாவட்டம்.
கைபேசி: 6383690730
வெற்றி கதை
(Success Story)
SELF LEARNING CENTER
சுய கற்றல் மையம்
கூந்தன்குளம்
“எழுத்துகளை நாளிதழில் கண்டறிதல் ..”
அரசு நடுநிலைப்பள்ளி, கூந்தன்குளம்.
நாங்குநேரி ஒன்றியம்.
சுய கற்றல் என்றால் என்ன?
குழந்தைகள் தனது திறன் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் கற்றலுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். இது குழந்தைகள் தங்கள் கற்றல் செயல்முறையை திட்டமிட்டு, நடந்து, முடிவு செய்யும் ஒரு முறையாகும்.
குழந்தைகளின் வீடு சுய கற்றல் மையமாகும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் படிக்கிறார்கள்.
பெற்றோர்கள் உதவியோடு குழந்தைகள் வீட்டில் படிக்க தொடங்குகிறார்கள்.
ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வழிகாட்டுகிறார்கள்.
வாட்ஸ் அப் குழு மூலம் ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் எவ்வித செலவும் இல்லாமல் முதல் கட்டமாக 44 கிராமங்களில் நடைபெறுகிறது. திருவள்ளூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது
இது சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் மதிப்பிற்குரிய கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரது ஒருமித்த கூட்டு முயற்சியாகும்
கற்றல் என்பது தொடர்ச்சியாக நிகழக்கூடிய ஒரு செயல். இயற்கையாக நிகழக்கூடிய ஒன்று. வகுப்பறையில் அது முறைப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்றால் பள்ளி முடித்த பின்பு குழந்தைகள் வீட்டுக்கு சென்று படிப்பதில்லை.
விடுமுறை நாட்களில் குழந்தைகள் படிப்பதில்லை. இந்த சூழலில் குழந்தைகள் பெற்றோர் வழிகாட்டுதலுடன் அனைத்து நாட்களிலும் குழந்தைகள் படிக்கிறார்கள். படிப்பதற்கு ஏழ்மை தடையல்ல என்பதை அறிய முடிகிறது.
குழந்தைகள் பழைய பாடங்களை மறந்து விடுவதால் அதனுடைய தொடர்ச்சியான புதிய பாடங்களையும் அவர்களால் படிக்க முடியவில்லை. இத்தகைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சுய கற்றல் மையம் உதவுகிறது. கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்
சுய கற்றலின் முக்கியத்துவம்:
தன்னிச்சையாக கற்றுக்கொள்கிறார்கள்.
நேரத்தைச் சரியாக பயன்படுத்தி, தங்களுக்கு ஏற்ற முறையில் கற்கிறார்கள்.
பல்வேறு புத்தகங்கள், இணையம், வீடியோக்கள் மூலம் தகவல்களைத் திரட்டி படிக்கிறார்கள்.
தன்னம்பிக்கை மற்றும் சிந்தனை திறன்கள் மேம்பாடு:
எடுத்துக்காட்டாக
வகுப்பறை பாட புத்தகம் படித்ததன் தொடர்ச்சியாக புதிய தகவல்களை தேடிப் படிக்கிறார்கள்.
யூடியூப் வீடியோக்கள் அல்லது இணையவழி பயன்பாட்டின் மூலம் கற்றல் நடைபெறுகிறது.
ஆர்வமான தலைப்புகளைத் தேர்வு செய்து கற்றுக் கொள்கிறார்கள்.
சுய கற்றல் நன்மைகள்:
தனிநபர் திறன் மேம்பாடு அடைகிறது.
புதிய விஷயங்களை ஆராயும் திறமை வளர்ச்சி அடைகிறது.
தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் திறன் வளரும்.
சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை வளரும்.
சுய கற்றல் மூலம் குழந்தைகள் தங்களின் அறிவாற்றலை பெருக்கி தனிப்பட்ட திறன்களையும் மேம்படுத்தி, சுயமாக செயல்படக் கற்றுக்கொள்கிறார்கள்.
“எழுத்துகளை நாளிதழில் கண்டறிதல் ..”
அரசு நடுநிலைப்பள்ளி, கூந்தன்குளம்.
நாங்குநேரி ஒன்றியம்.

குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கூறியதை பெற்றோர் உதவியுடன் குழந்தைகள் வீட்டில் பழைய செய்தித்தாள் உதவி கொண்டு எழுத்துக்களை அடையாளம் காணும்
புதிய முயற்சி பெற்றோர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பெற்றோர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் குழந்தை கேள்வியை புரிந்து கொண்டு பதில் அளிப்பது பாராட்டுக்குரியது. ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது அங்கு பயன்படுத்திய எழுத்துக்களை புதிய சூழலில் பெற்றோர்கள் கேட்கும்போது சிறப்பாக விடை அளிக்கும்போது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. வகுப்பறை சிறப்பாக நடைபெறுகிறது என்பதை பெற்றோர்களாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சுய கற்றல் முயற்சியின் காரணமாக சேர்க்கை அதிகரிக்கும். கற்றல் சுதந்திரமாக நடைபெறுகிறது. பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்கிறார்கள்
அனைவருக்கும் நன்றி!











