• Home
  • தமிழ்நாடு
  • கவிஞர் சுனில் அவர்கள் எழுதிய “இன்குபேட்டர் இதயம்” கவிதை நூல் வெளியீட்டு விழா!
தமிழ்நாடு

கவிஞர் சுனில் அவர்கள் எழுதிய “இன்குபேட்டர் இதயம்” கவிதை நூல் வெளியீட்டு விழா!

Email :175

கவிஞர் சுனில் அவர்கள் எழுதிய “இன்குபேட்டர் இதயம்” கவிதை நூல் வெளியீட்டு விழா பெரம்பலூர் அகிலா மஹாலில் நடைபெற்றது.
கவிஞர் அவர்கள் பதியம் இலக்கிய சங்கமம் நடத்திய இந்த நிகழ்விற்கு அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ் ஆய்வு துறை பேராசிரியர் முனைவர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஏஞ்சலின் வின்சென்ட் வெளியிட முதல்வர் மேரி எமரென்சியா பெற்றுக்கொண்டார்.

பெண்ணாடம் கனகசபை நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் சண்முகம், மதியம் இலக்கிய சங்கத்தின் பொறுப்பாளர் சாரங்கபாணி, அறந்தாங்கி புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜான் கென்ன டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் மூர்த்தி பேராசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திராணி வரவேற்று பேசினார். கெவின் நன்றி கூறினார். வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் முத்துமாறன் நூல் அறிமுக உரையாற்றினார். நூலாசிரியர் சுனில் ஏற்புரை நிகழ்த்தினார். திரளான இலக்கிய அலுவலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts