திருச்சி கீழ குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

இதில் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அப்பகுதி பொதுமக்கள் மனுக்களாக வழங்கினார்கள். மேலும் அதில் சிறப்பு மனுவாக கீழக்குறிச்சியில் ராணி மங்கம்மா மண்டபம் இருந்த இடத்தில் சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது அதனை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென சமூக ஆர்வலர் ஜோசப் வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவேலிடம் மனு அளித்தார். மேலும் அந்தப் பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையையும் புதிய கட்டிடம் கட்டி இடமாற்றம் வேண்டும் எனவும் மனு அளித்தனர். இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலர்கள் அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.














