திருச்சி அரியமங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் அணி சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம். திருச்சி மாவட்ட எஸ் டி பி ஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணி சார்பில் 76 ஆவது குடியரசு தின விழா அரியமங்கலம் ரயில் நகர் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட தலைவர் எஸ்.எஸ் ரஹமத்துல்லாஹ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். திருவெம்வெறுபூர் தொகுதி தலைவர் ஐ. சேக்., தொகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் குடியரசு தின உரையாற்றினார் .நிகழ்ச்சியில் ஹயிருதீன், மகபூப் பாஷா, தொகுதி துணைத் தலைவர் சிராஜுதீன், சேக் முஜிபுர் ரஹ்மான், கவுஸ் பாஷா, முகமது சித்தீக் ஜமால் மைதீன், சாதிக் பாஷா, பஷீர் முஹம்மது, மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.













