“கண்தானம்” பார்வை மீட்புப் பணி,
இரங்கல் செய்தி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர், ஜெய்நகரில் வசித்து வரும் முன்னாள் பெல் ஊழியர், 12-07-2024 அன்று மறைந்த பின் தனது கண்களை தானம் அளித்துச் சென்ற அமரர் A.பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியார் திருமதி.B.பங்கஜம் ( வயது 72) அவர்கள் இன்று மதியம் 14-12-2024 (சனிக்கிழமை) 15-30 மணியளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டதின் காரணமாக காலமாகி விட்டார்கள்.
அதனை தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலோடு அன்னாரது இரண்டு கண்களும் திருச்சிராப்பள்ளி ஜோசப் கண் மருத்துவமனை கண்வங்கி மருத்துவர்கள் மூலமாக, கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. திருமதி.B.பங்கஜம் அவர்கள் மறைந்த பிறகும், இரண்டு பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, மறைந்தும் மறையாப் புகழை அடைந்து விட்டார்கள். தனது
தாயாயாரின் கண்களைத் தானமாக அளிக்க முன் வந்த மகன்கள் திரு. B.சந்திரசேகர், B.செந்தில்குமார் , மகள் திருமதி. சுமதி கிருஷ்ணகுமார், மற்றும் அவர்களது குடும்பத்தாரின்

மனிதநேயப்பண்பை பாராட்டுவோம்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும்,
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வருத்தத்துடன்,
கி.செல்வராஜ்.
கவுரவ கிரீஃப் கவுன்சிலர் மற்றும் கண்தான ஊக்குவிப்பாளர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
Cell : 094430 16805












