தமிழ்நாடு

நாடுபோற்ற வாழ்ந்திடுவோம்!

Email :85


கல்லும் கசிந்துருகும்
கருணை மனம்பெருக
வில்லும் விசைகொள்ளும்
வீரம் விரல்பதிய.

சொல்லும் அவையேறும்
சொற்கள் வலிவாக
புல்லும் புவியாளும்
பொன்மனம் பொலிவாக.

சிந்தனைச் சீராக்கு
செம்மைநலம் கூடிவரும்
செயல்களைப் பெரிதாக்கு
உம்மைப்புகழ் தேடிவரும்.

வாழ்க்கையொரு தேனாறு
வசந்தமாய் நீராடு
வாழுகின்ற மக்களுக்கு
வழிகாட்டப் போராடு.

மனிதராய்ப் பிறந்துவிட்டோம்
மனிதத்தை வளர்த்திடுவோம்
கனியிருக்கக் காய்கவர்ந்து
கண்ணியம் இழக்கவேண்டாம்.

நாவைச் சுருக்கிடுவோம்
நல்லன பெருக்கிடுவோம்
நல்லோரை வாழ்த்திடுவோம்
நாடுபோற்ற வாழ்ந்திடுவோம்.

வணக்கத்துடன்,
வீ.கோவிந்தசாமி,
திருச்சிராப்பள்ளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts