Email :83
திருச்சியை சேர்ந்த மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் (வயது 60) மனிதநேய சேவையின் அடையாளமாக 40-ஆவது முறையாக குருதிக் கொடை வழங்கினார்.
தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த குருதிக் கொடை நிகழ்வில், வயது ஒரு தடையல்ல; மனிதநேயமே முக்கியம் என்பதை செயலால் நிரூபித்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக குருதிக் கொடை வழங்கி வரும் அவர், இளைஞர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
அவரது இந்த சேவை மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.














