• Home
  • தமிழ்நாடு
  • “வாழ்க்கை விலைமதிப்பற்றது தற்கொலை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு!
தமிழ்நாடு

“வாழ்க்கை விலைமதிப்பற்றது தற்கொலை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு!

Email :108

நாட்டு நலப்பணித் திட்டம், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி, புனித சிலுவை  தன்னாட்சிக் கல்லூரியின்  நாட்டு நலப்பணித் திட்டமானது 12.02.2025 அன்று, “வாழ்க்கை விலைமதிப்பற்றது தற்கொலை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஜா. கரன் லூயிஸ், சமூக மனநல ஆலோசகர் மற்றும் தற்கொலை தடுப்பு மனநல ஆலோசகர்  ஆத்மா மனநல மருத்துவமனை திருச்சி மற்றும் Ln. சரவணன், கதிரொளி தொண்டு நிறுவனம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஜா. கரன் லூயிஸ் , மனநல ஆலோசகர், மாணவிகளுக்கு வாழ்க்கை விலைமதிப்பற்றது தற்கொலையை நிறுத்துங்கள் என்ற தலைப்பில் ஆலோசனை வழங்கினார்.

மற்றும் அவர்கள் இளைய சமூக வயதினிலே அதிகரித்து வரும் தற்கொலை குறித்தும் ஒரு தற்கொலையினால் ஒரு குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதனையும்  மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் ஆத்மா தற்கொலை தடுப்பு மைய என் 8 901 901 901 குறித்தும் விளக்கம் அளித்தார், மேலும் பல பயனுள்ள தகவல்களை வழங்கினார்.
Ln. சரவணன், கதிரொளி தொண்டு நிறுவனம், அவர்கள்  வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில்  சிறப்புரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்களின் தலைமையில், கல்லுரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வானது இனிதே நடந்தேறியது.
இளங்கலை இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர். பி மெர்லின் கோகிலா அவர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இக்கூட்டத்தில் திட்ட அலுவலர்  பேராசிரியர் குழந்தை பிரியா கலந்து கொண்டார்கள் மற்றும் முனைவர் ஹேமலதா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் நன்றியுரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts