• Home
  • இந்தியா
  • “”மனவளத்தை மேம்படுத்துவோம்”” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தியா

“”மனவளத்தை மேம்படுத்துவோம்”” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Email :101

தமிழக அரசின் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால பயிற்சி திட்டம் திருச்சி துவாக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயில வருகை புரிந்திருக்கும் மாணவர்களுக்கு “”மனவளத்தை மேம்படுத்துவோம்”” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சத்தியா தலைமை தாங்கி வழி நடத்தினார் மற்றும் பொது நிர்வாகவியல் துணைத் தலைவர் அப்துல் சலாம் நிகழ்ச்சியை வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு.கரன் லூயிஸ் அவர்கள் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் போதை பிரச்சினைகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார் மற்றும் குழந்தைகள் நலக்குழு மற்றும்  சிறப்பு சேவைகள் துறை திரு பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts