மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி,இந்த வருடத்தில் 01.01.2026 முதல் 31.01.2026 வரை ஒரு மாத கால சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தர,

திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் ரா. கோவிந்தராஜ் தலைமையில், 19 .01. 2026 அன்று பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ,தமிழ்நாடு அரசு திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் திரு சத்தீஷ் குமார் அவர்களது வரவேற்பில் ,சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள் திரு, தாமஸ் ,திரு சசி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின்

திருச்சி மாவட்ட செயலாளர் Dr .கார்த்திக், மற்றும் போக்குவரத்து வணிகப் பிரிவு திருச்சி மண்டல உதவி மேலாளர் திரு சுரேஷ் குமார் ,உதவி மேலாளர் திரு சேகர் (KKBT) உதவி பொறியாளர் திரு சக்தி, திரு சரவண பாபு ஆகியோர் ஒத்துழைப்புடன் பேருந்து பயணிகளான பொதுமக்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிகள், விதி மீறுதல்களால் ஏற்படும் விளைவுகள், பற்றியும்,

தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அறிவுரை வாக்குறுதிகள் அடங்கிய கை பிரிதிகள் கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் பாறாட்டுதல்களுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.














