• Home
  • தமிழ்நாடு
  • நெகிழிப் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகள் – மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி, திருச்சிராப்பள்ளி, சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பில், தன்னார்வலர்களுக்கான காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி பட்டறை (Paper Bag Workshop) இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு

நெகிழிப் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகள் – மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி, திருச்சிராப்பள்ளி, சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பில், தன்னார்வலர்களுக்கான காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி பட்டறை (Paper Bag Workshop) இன்று நடைபெற்றது.

Email :8

நெகிழிப் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகள் – மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி, திருச்சிராப்பள்ளி, 24.09.2026.
சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பில், தன்னார்வலர்களுக்கான காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி பட்டறை (Paper Bag Workshop) இன்று (24.09.2026) நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் இப்பயிற்சி பட்டறை நடைபெற்றது. மேலும், காகிதப் பை தயாரிக்கும் திறனை மாணவத் தன்னார்வலர்களுக்கு வழங்குவதன் மூலம், அதனை எதிர்காலத்தில் சுயதொழில் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி பட்டறையை திரு. செந்தில்குமார், வட்டார வளர்ச்சி துணை அலுவலர், திருச்சிராப்பள்ளி, அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாணவத் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காகிதப் பைகளைத் தயாரிக்கும் முறைகளைப் பயிற்சி பெற்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவிகள் தாங்களே தயாரித்த காகிதப் பைகளை அருகிலுள்ள கடைகளுக்கு கட்டணமின்றி வழங்கி, நெகிழிப் பைகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
“நெகிழியைத் தவிர்ப்போம்; காகிதப் பைகளைப் பயன்படுத்துவோம்; சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சிறப்பான முயற்சியாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts