• Home
  • தமிழ்நாடு
  • சாத்தனூர் பெரியகுளம் கரையில் 70-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா!
தமிழ்நாடு

சாத்தனூர் பெரியகுளம் கரையில் 70-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா!

Email :3

சாத்தனூர் பெரியகுளம் கரையில் 70-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா!
திருச்சி சாத்தனூர் பெரியகுளம் கரைப்பகுதி மற்றும் பிடாரி கோவில் சுற்றுவட்டாரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 70-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாரதி மேனிலைப் பள்ளி சேர்மன் சாத்தனூர் சிவா தலைமை வகித்தார். இயற்கை ஆர்வலர் பாலா பாரதி, சாத்தனூர் இராமலிங்கம், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், ஆர்.சி.எஸ். மதிவாணன், கோவில் நிர்வாகி தாரணி, மரம் மாதவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ராசி மரங்கள், நட்சத்திர மரங்கள் மற்றும் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் ஆர்வத்துடன் நடப்பட்டன. பெரியகுளம் கரைப்பகுதியை பசுமையான பகுதியாக மாற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் பட்சத்தில், எதிர்காலத்தில்

இப்பகுதிக்கு பசுமை வளத்தை அதிகரிப்பதுடன், பறவைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு இயற்கையான வாழ்விடத்தையும் உருவாக்கும்.
மரங்களை நடுவது மட்டுமின்றி, அவற்றை தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதே உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை பாதுகாப்புக்கான தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

கே.சி. நீலமேகம்
மக்கள் சக்தி இயக்கம்
தண்ணீர் அமைப்பு
திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts