“ஆவூர் அரசு உதவிபெறும் ஆர்.சி. துவக்கப்பள்ளி மாணவர்களின் ஊர்புற நூலக பயணம்”.
ஆக்கம்:
எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்.
இன்று (25.02.2025), ஆவூர் அரசு உதவிபெறும் ஆர்.சி. துவக்கப்பள்ளி மாணவர்கள் ஊர்புற நூலகத்தை உற்சாகத்துடன் வந்தடைந்தனர்.

நூலகத்தின் அமைதியும் அறிவின் வளமையும் அவர்களை உற்சாகப்படுத்தியது.
மாணவர்கள் தாங்கள் வாசித்த நூல்களின் கதைகளை உயிரோட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
கதைகள் கூறும் போதெல்லாம் அவர்கள் கற்பனை உலகில் சிறகடித்து பறந்தனர்.
கதைகளைத் தொடர்ந்து, தங்கள் சிந்தனைகளையும் கலைநயத்தையும் வெளிக்கொண்டு வர, மாறுபட்ட வண்ணங்களில் அழகான ஓவியங்களை வரைந்து வழங்கினர்.
வாசிப்பு மட்டுமின்றி, தங்களது அறிவுத் திறனை வெளிப்படுத்த, தங்களுக்கு தெரிந்த அறிவியல், வரலாறு, இலக்கியம் போன்ற தலைப்புகளில் கேள்வி-பதில் வடிவில் கருத்துக்களை கரும்பலகையில் எழுதினர்.
இது, நூலகம் என்பது வெறும் புத்தகங்கள் நிறைந்த இடமல்ல, அறிவு பரிமாற்றம் நிகழும் அரங்கம் என்பதற்கான உயிர்துடிப்பு போன்றிருந்தது.

இந்த அனுபவம், மாணவர்களுக்குப் புத்தகங்களை நேசிக்கவும், கற்பதின் மகிமையை உணரவும் உதவியது. குழந்தைகளின் இந்த ஆர்வம், தங்களை எதிர்காலத்தில் அறிவாளிகளாக வடிவமைக்க நிச்சயம் ஊக்கமாக இருக்கும்.
அறிவுக்கு வாசல் திறந்த நூலகமும், அதை உற்சாகமாக நிரப்பிய மாணவர்களும், சமூகத்திற்கும் கல்விக்காகவும் ஒளியூட்டும் விளக்குகளாக திகழ்கின்றனர்.

ஆவூர்.
புதுக்கோட்டை மாவட்ட
நூலகர்,ப. நாகலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.
கல்விக்காக அர்ப்பணிப்பு!














