மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் உடல் உறுப்பு தானம், உடல்தானம் செய்வரின் குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ், மற்றும் குடும்ப நிலையிற்கு ஏற்ப உதவித்தொகை வழங்கி வருகிறாம். இதுவரை சுமார் 40க்கு மேற்பட்ட குடும்பத்தினரை கௌரவப்படுத்தி இருக்கிறோம்.

சென்ற வாரம் கண்தானம், உடல்தானம் செய்த திருச்சி மாவட்டத்தில் பல அமைப்புகள் மூலம் பொது சேவை செய்த திரு.எம். பொன்இளங்கோ அவர்களின் கண் மற்றும் உடல்தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவது அவர்களின் தியாகத்தைப் போற்றி, சமூகத்தில் இது போன்ற தன்னலமற்ற செயல்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சைக்கு உதவும் என்பது தெளிவாகிறது.
இவரின் செயலை பாராட்டு வகையில் திருமதி. வசந்தா பொன் இளங்கோ மற்றும் மகன் சந்தித்து கண்தானம் மற்றும் உடல்தானம் செய்த அனுமதித்தற்கு பாராட்டி பயனாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க சார்பில் மாநில துணைத் தலைவர் பெரம்பலூர் பெரியசாமி, மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், மாநில நிர்வாகி வே.இரா.சந்திரசேகர் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.














