• Home
  • தமிழ்நாடு
  • லால்குடி வட்டம் ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா!
தமிழ்நாடு

லால்குடி வட்டம் ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா!

Email :16

லால்குடி வட்டம் ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா!
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மேலபெருங்காவூர் ஊராட்சியில் உள்ள கீழப்பெருங்காவூர் கிராமத்தில், ரோஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா 24.10.2026 அன்று காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
கார்ப்

பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) அடிப்படையில், இன்பினிட் சேவா பவுண்டேஷன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அருந்ததியர் சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலபெருங்காவூர் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை ஆல்பர்ட் புஷ்பராஜ் அவர்களின் நல்லாசியுடன் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் திரு. டேனியல்,

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் தொண்டு மற்றும் சேவை செய்வதற்கு நல்ல உள்ளம் வேண்டும் என்றும் இந்நிகழ்ச்சி நடைபெற உதவிய அனைவரையும் பாராட்டினார். ரோஸ் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்று, தொண்டு நிறுவனத்தின் சமூகப் பணிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்துப் பேசினார். மேலபெருங்காவூர் ஊராட்சி மன்றச் செயலாளர் திரு. கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் விளிம்பு நிலை மக்களான ஒன்பது பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் தங்களது குடும்ப வருமானத்தைப் பெருக்குவதோடு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தில் செழுமையான வாழ்க்கை வாழ முடியும் என்று வலியுறுத்தப்பட்டது. இறுதியில், ரோஸ் தொண்டு நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுமதி நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts