செயின்ட் ஜோசப் கல்லூரியில் கத்தோலிக்கக் கிறித்தவ மாணவர்களுக்கு ஒருநாள் தியானம்!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயில்கிற கத்தோலிக்க வெளி மாணவிகள் மற்றும் முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை வெளி மாணவர்களுக்கான ஆண்டு தியானம் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல்,சே.ச., செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச., முதல்வர் அருள்முனைவர் சி .மரியதாஸ், சே.ச. ஆகியோரின் வாழ்த்துகளோடும், வழிகாட்டுதலோடும் *”நற்செய்தியில் வேரூன்றி நம்பிக்கையில் கனி தர”* என்கிற மையப் பொருளில் ஒரு நாள் தியானம் நடைபெற்றது. இத்தியானத்தில் 295 மாணவிகள், 243 மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.

ஆன்மிக வளர்ச்சி, சுய பரிசீலனை மற்றும் இறை மதிப்பீடுகளை உள்வாங்கும் இறை அனுபவமாக நடைபெற்ற இத்தியானத்தை சலேசியன் துறவறச் சபையைச் சார்ந்த அருள்தந்தையர்கள் அருள் ஆண்டனி, திரவிய ரூபன், மைக்கேல் ஆரோக்கியசாமி ஆகியோர் வழிநடத்தினர்.

கல்லூரிப் பேராசிரியர்கள் உறுதுணையாக இருந்து இத்தியானம் சிறப்பாக நடைபெற துணைபுரிந்தனர் அருள்தந்தை ஜோசப் சேவியர், சே.ச. தலைமையிலான வளாக ஆன்மிகக்குழுவினர் ஒருநாள் தியானத்திற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.














