• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து எம்பிஏ டிவின்னிங் பட்டப்படிப்பு  தொடக்க விழா!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து எம்பிஏ டிவின்னிங் பட்டப்படிப்பு  தொடக்க விழா!

Email :75

செயின்ட் ஜோசப் கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து எம்பிஏ டிவின்னிங் பட்டப்படிப்பு  தொடக்க விழா!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து எம்பிஏ டிவின்னிங் பட்டப்படிப்பு  தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி நூலக அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச., கல்லூரி முதல்வர்  அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச., இயக்குநர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி முனைவர் கே. சிவகுமார், முனைவர் மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

அதிபர் தந்தை தமது தலைமையுரையில், ஸ்டீபன் கோவி தனது மிகவும் பயனுள்ள மக்களின் எட்டு பழக்கவழக்கங்கள் என்ற நூலில் வலியுறுத்தும் எட்டாவது பழக்கமான தனது மிகப்பெரிய சொத்தாக நாம் நம்மையே கருத வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.  மேலும் வேகமாக மாறிவரும் சூழலின் சகாப்தத்தில், தொடர்ச்சியான கற்றல் மற்றும் அறிவு மற்றும் திறன்களைப் புதுப்பித்தல் தவிர்க்க முடியாதது. உங்கள் உள் குரல் அல்லது அழைப்பைக் கண்டுபிடிப்பது, அதற்கு பதிலளிப்பது மற்றும் சிறந்ததைப் பெறுவது மற்றும் நீங்கள் கற்றுக்கொண்ட மற்றும் நேசித்தவற்றால் மற்றவர்களையும் ஊக்குவிப்பது மிகவும் முக்கியம் என்கிற கருத்தையும் பதிவு செய்தார்.

கல்லூரி முதல்வர் முதல்வர் தமது உரையில் தனக்கும், பணிபுரியும் நிறுவனத்திற்கும் ஒரு முக்கியமான சொத்தாக வளரத் தேவையான மென்  திறன்களை வலியுறுத்தினார். மாணவர்கள் தொடர்புத் திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

திருச்சி ஜே.ஜே. பொறியியல் கல்லூரியின் எம்பிஏ இயக்குநர் முனைவர் கே. சிவகுமார் தொலைதூரக் கல்வி முறையில் எம்பிஏ பயிலும் மாணவர்கள் நிறுவனங்களுக்குத் தேவையான திறன்களைப் பெற்றால் வேலைவாய்ப்புச் சந்தையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைத் தம் உரையில் எடுத்துக் கூறினார்.

செயின்ட் ஜோசப் கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய இயக்குநர் முனைவர்  மகேந்திரன் மாணவர்கள் எம்.எஸ். எக்செல் கற்க வேண்டும், ஏனெனில் இது வேலைகளைப் பெறுவதற்கும், தங்கள் முதலாளிகளைக் கவருவதற்கும் வாய்ப்புகளை பிரகாசமாக்கும். மாணவர்கள் விண்ணப்பங்களை எழுதுவதிலும் நேர்காணல் செய்வதிலும் சிறந்தவர்களாக இருந்தால், மற்றவர்களை விட வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எடுத்துரைத்தார். முன்னதாக முனைவர் அந்தோணி ஜேசுராஜா வரவேற்புரையாற்றினார். நிறைவில் பேராசிரியர் ஷெர்லின் வினோதா நன்றியுரையாற்றினார். முனைவர் டென்னிஸ் எட்வர்ட் பெர்னாண்டோ நிகழ்வுகளை நெறியாள்கை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts