• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரி உளவியல் துறை சார்பில் அறிவியல் யோகா கருத்தரங்கம்!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரி உளவியல் துறை சார்பில் அறிவியல் யோகா கருத்தரங்கம்!

Email :55

செயின்ட் ஜோசப் கல்லூரி உளவியல் துறை சார்பில் அறிவியல் யோகா கருத்தரங்கம்!

திருச்சி ஜோசப் கல்லூரி முதுகலை உளவியல் துறை சார்பாக அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.‌ க்ஷ கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.‌ எப்போதும் சந்தோசமாக இருக்க யோகா பயன்படும் என்று சுட்டிக்காட்டி தினம் சிறிது நேரம் அனைவரும் யோகா செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

உலகின் பல நாடுகளில் நேரடியாகவும் இணைய வழியிலும் யோகா பயிற்சி கொடுத்துவருகிற,  திருச்சி, சக்தி யோகலாயா, மாடர்ன் யோகா ஸ்டூடியோ இயக்குநர் திருமதி. கவிதா இளையராஜா, அமெரிக்காவிலிருந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச்  சிறப்பித்தார். ஓகம் எனும் மூலச் சொல்லில் இருந்து யோகா எனும் வார்த்தை வந்ததாகவும், உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் நூலாக மூச்சுக்காற்று  இருப்தாகவும் குறிப்பிட்டார். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் உள்ள, அட்டாங்க யோகத்தை மையமாக வைத்து, யோகாவையும் மூச்சுப் பயிற்சியையும் சேர்த்து செய்கிறபோது கிடைக்கும் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்து விளக்கினார். சக்தி யோகாலய மையத்தின் மேலாளர் தேவி,  யோகாவைச் செய்துகாட்ட, மாணவர்கள் உற்சாகமாகச் செய்தார்கள்.

தூய வளனார் கல்லூரியின் முதுகலை உளவியல்  துறைத்தலைவர் முனைவர் ஜான் பாலையா, உதவிப் பேராசிரியர் அருள்முனைவர் சூ.ம.ஜெயசீலன் மற்றும் உளவியல் ஆலோசகர் திருமதி வனிதா கந்தசாமி ஆகியோர்  இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். எட்டுத்துறைகளின் இளங்கலை மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts