• Home
  • தமிழ்நாடு
  • “கிராமங்களில் கல்வி ஒளி பரப்பும் சுய கற்றல் மையங்கள்”
    ( செலவில்லாத திட்டம் ).
தமிழ்நாடு

“கிராமங்களில் கல்வி ஒளி பரப்பும் சுய கற்றல் மையங்கள்”
( செலவில்லாத திட்டம் ).

Email :194

கிராமங்களில் கல்வி ஒளி பரப்பும் சுய கற்றல் மையங்கள்”
( செலவில்லாத திட்டம் ).
23.02.2025

ஆக்கம்:
எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்.
Mob.63 83 690 730
Mail:sivakumardiet@gmail.com

அறிமுகம்:
சுய கற்றல் மையங்கள் மூலம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட பெரும் மாற்றம் சமீப காலத்தில் சமூக மாற்றத்திற்கே வழிவகுக்கிறது.

பெற்றோர்கள் மத்தியில் அரசின் நல திட்டங்களை எடுத்து  கூறியும் மற்றும் உங்கள் குழந்தைகள்  சுய கற்றல் வாயிலாக நன்றாக படிப்பார்கள் என்பதை  திருச்சி மாவட்டம் பாதர் பேட்டையில் பணியாற்றும் ஆசிரியர் மி.தனலட்சுமி மேற்கண்ட முயற்சி நல்ல பலனை தந்துள்ளது. மேலும்

கல்வியின் தாக்கம்: குழந்தைகள் பள்ளி வேலை முடிந்த பிறகு மட்டுமல்லாது, விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து படித்து வருகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை ஊக்குவித்து, சிறிய வழிகாட்டுதலுடன் தொடர்ந்து கற்றலை உறுதிசெய்கிறார்கள்.

குழந்தைகள் தங்கள் தெருவில் வசிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் கற்றல் உதவி அளித்து, ஒருவருக்கொருவர் அறிவை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இது, தனிமையாக மட்டும் அல்லாது, குழுவாகவும் கற்றலை ஊக்குவிக்கிறது.

தொகுப்புரை:
சுய கற்றல் மையத்தின் செயல்பாடுகள் மாறிவரும் உலகத்திற்கே உதாரணமாக உள்ளன.

Whatsapp குழு மூலம் குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பாடத்திட்டங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுகிறது.

மாணவர்கள் கணிதம், தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் மட்டும் அல்லாமல், பிற இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்கொணர்கிறார்கள்.

இந்த திட்டத்தின் சிறப்பை சுட்டிக்காட்டும் விதமாக, குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்புத்திறன் மற்றும் உரையாடல் திறன்களை மேம்படுத்திக் கொண்டு, தங்களது கருத்துகளை பயப்படாமல் வெளிப்படுத்தும் ஆற்றலை பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை காணும்போது மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

கல்வி என்பது பள்ளிக்குள் மட்டும் முடிவதில்லை; அது வீட்டிலும் சமூகத்திலும் தொடர வேண்டும் என்பதற்கான அருமையான உதாரணமாக இந்த மையங்கள் மிளிர்கின்றன.

இது பற்றிப் பேசும் ஓய்வு பெற்ற முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. எஸ்.சிவகுமார், “சுய கற்றல் மையங்கள் குழந்தைகளின் தனித்திறன்களை வெளிக்கொணர, அவர்கள் தன்னம்பிக்கையுடன் தன்னிறைவு அடைய வைக்கும். இந்த முறை, கல்வி சமத்துவத்தையும் சமூக நீதியையும் முன்னேற்றுகிறது” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

கல்வியின் ஒளி கிராமங்களின் ஒவ்வொரு வீதியிலும் பரவ, குழந்தைகள் எதிர்காலத்தில் அறிவு உள்ளம் கொண்ட தலைமுறையாக உருவாக, சுய கற்றல் மையங்கள் சமுதாய மாற்றத்திற்கான கல்வி விதை ஆகும்.

மேலும் திருச்சி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்
இந்த முயற்சிகள் தொடர்ந்து விரிவடைந்து உள்ளது,

அனைத்து குழந்தைகளின் வாழ்க்கையிலும் கல்விச் செல்வத்தை கொழிக்கும் ஒரு தொடர்ச்சியான இனிய பயணமாக மாறும்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts