
சுயக் கற்றலில் ஓவியம் – உளவியல் தாக்கம்,
எஸ். சிவகுமார் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மட்டும் பயிற்சி நிறுவனம் .
காஞ்சிபுரம் மாவட்டம்
Mob..6383690730
அறிமுகம்:
சுயக் கற்றல் செயல்பாடுகளில் ஓவியம் சிறப்பான உளவியல் நன்மைகளை அளிக்கின்றன. மேலும்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், DIET, விரிவுரையாளர் டாக்டர் உஷாவின் ஊக்கத்தால், சாக்கவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஈஸ்வரியின் வழிகாட்டுதலிலும், பெற்றோர்களின் உதவியாலும் மாணவர்கள் அரையாண்டு விடுமுறையில் , ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.

மாணவர்கள் சுயக் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த செயல்பாடுகளை வாட்ஸ்ஆப் குழு வழியாக பெற்றோர்கள் உதவியோடு பகிர்கின்றனர் .
சுயக் கற்றலில் ஓவியத்தின் பங்கு:
ஓவியம் வரைவதில் மாணவர்களின் திறமையை வார்த்தைகளால் கூற முடியாத வகையில் வெளிப்படுத்த சிறப்பாக உள்ளது.
இவை படைப்பாற்றல், சுய வெளிப்பாடு, மற்றும் கற்பனைக்கு உதவுகிறது. சுயக் கற்றலின் ஒரு பகுதியாக, ஓவியம் சுய சிந்தனை, பிரச்சனை தீர்க்கும் திறன்கள் மற்றும் முடிவு எடுக்கும் திறன்களை வளர்க்கிறது. நிறங்கள், மற்றும் வடிவங்களைத் தேர்வு செய்வதன் மூலம், மாணவர்கள் சுயமாக பயன்படுத்தி தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறார்கள்.

உளவியல் நன்மைகள்:
மன அழுத்தத்தைக் குறைக்கும்: ஓவியம் வரைவது மூலம் மன அழுத்தத்தை குறைத்து, மாணவர்களின் உளவியல் நலத்தை மேம்படுத்துகிறது.
கவனம் மேம்பாடு: ஓவியம் நிதானத்தையும் கவனத்தையும் வளர்க்க தேவைபடுகிறது.
சுய விருப்பத்தால் ஓவியத்தில் ஈடுபடும் போது, கற்றலின் மீது ஆர்வம் வளர்கிறது. ஓவிய செயல்பாடுகள் அவர்களின் படைப்பாற்றலை ஆராய அனுமதிக்கிறது, இதனால் கற்றல் மகிழ்ச்சியானதாக மாறுகிறது.

முடிவுரை:
சிவகங்கை மாவட்ட சக்கவாயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஓவியம் வரைதல் முயற்சி, மாணவர்களின் உளவியல் வளர்ச்சியில் ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் whatsapp குழு கண்காணிப்பு முறைகளின் பங்களிப்புடன், மாணவர்கள் உணர்ச்சி, அறிவு மற்றும் உளவியல் வளர்ச்சியை டாக்டர் உஷா போன்ற அர்ப்பணிப்பு மிக்க கல்வியாளர்களின் ஊக்கத்தால், இப்படியான செயல்பாடுகள் சுயக் கற்றலின் சக்தியை வெளிப்படுத்துகிறது,
நன்றி.

