அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வான் நோக்கு நிகழ்ச்சி. கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க பிரச்சார உபகுழுவின் சார்பாக கரூர் மாவட்டச்செயலாளர் ஜான் பாஷா அவர்களின் வழிகாட்டுதலின்படி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வான் நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை வகித்தார். முதன்முறையாக பள்ளியில் டெலஸ்கோப் கொண்டு மாணவர்களுக்கு வானியல் அறிவு ஏற்படுத்தப்பட்டது.
டெலஸ்கோப் கொண்டு வானத்தில் உள்ள ஜூபிடர், மார்ஸ் ஆகிய கோள்கள் காண்பிக்கப்பட்டன. மேலும் நெபுலா எரிநட்சத்திரம் காட்டப்பட்டது.
சூரியன் மறைந்ததும் மற்ற கோள்களின் நிலைகள் பற்றியும் டெலஸ்கோப் பற்றியும் மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் சரவணன் விளக்கினார்.

மேலும் மூளை சார்ந்த விளையாட்டுகளை செல்வி பிரகலாவதி நடத்தினார்.
மேலும் பெற்றோர்களின் அலைபேசியில் ஸ்கை வியூலைட் ஆப் நிறுவி தரப்பட்டது.அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராபியா பஸ்ரி நன்றி கூறினார்.மகிழ் முற்ற செயலர் சகாய வில்சன்,

ஷகிலாபானு,கவிதா, கிருஷ்ணவேணி, ஜோதிமணி,கதிரேசன்,
உஷாராணி,பிரேமலதா, ஷபான் தஸ்லிம் ஆகிய ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அரவக்குறிச்சி ஒன்றியப் பள்ளிகளிலேயே முதன்முறையாக வான்நோக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.













