• Home
  • தமிழ்நாடு
  • தெற்கு ரயில்வே பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி – 2025!
தமிழ்நாடு

தெற்கு ரயில்வே பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி – 2025!

Email :1105

தெற்கு ரயில்வே பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி – 2025!
பொன்மலை ரயில்வே இன்ஸ்டிடியூட் மைதானம் 9.10.25, 10.10.25 இரண்டு நாட்கள் நடைப்பெற்றது. தெற்கு ரயில்வேயிலுள்ள சென்னை, திருச்சி, பொன்மலை, மதுரை, சேலம், பாலக்காடு 6 கோட்ட ரயில்வே பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி 9.10.25 பொன்மலை ரயில்வே மைதானத்தில் பொன்மலை ரயில்வே பணிமனை மேலாளர் திரு.சந்தோஷ்குமார் பட்ரோ அவர்கள் தலைமையில், கெளரவ விருந்தினராக தென்னக ரயில்வே மகளிர் வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் திருமதி.ரிதாஞ்சலி  தொடங்கி வைத்தார்கள். வந்தவர்களை துணை முதன்மை பர்சனல் ஆபீஸர் எஸ்.திருமுருகன் (Dy Cpo) வரவேற்றார். 
10.10.25 நடந்த பரிசு அளிப்பு விழாவில்
கைப்பந்து போட்டியில் முதல் இடம் பொன்மலை ,கால்ப்பந்து போட்டி முதல் இடம் சென்னை, பேட்மிட்டன் ஆண்கள் போட்டியில் முதல் இடம் பாலக்காடு,
பெண்கள் போட்டியில் முதல் இடம் பொன்மலை, ஆண், பெண் கலப்பு இணை போட்டியில் முதல் இடம் பொன்மலை,
ஒட்டு மொத்தப் போட்டியில் மேல்நிலைப்பள்ளியில் முதல் இடம் பெரம்பூர், இரண்டாம் இடம் மதுரை,
ஒட்டு மொத்த உயர்நிலைப்பள்ளி போட்டியில் முதல் இடம் பெரம்பூர், இரண்டாவது இடம் பொன்மலை வெற்றி பெற்றார்கள். பரிசளிப்பு விழாவில் பொன்மலை ரயில்வே பணிமனை மேலாளர் திரு.சந்தோஷ்குமார் பட்ரோ, அவர்கள் வெற்றி பெற்றவருக்கு  பரிசுகளை வழங்கினார். விழாவில் துணை முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர் திரு.சதீஸ் சரவணன், ஏ. கே. பிரிட்,  
(A. K. Prit), உதவி பாதுகாப்பு ஆணையர், 5BN RPSF/திருச்சி. ஆகியோர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழாவில் சிறப்பாக விளையாட்டு போட்டியிற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் பொன்டையை போர்த்தி பாராட்டபட்டது.
போட்டிகளை திருச்சி மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் நடத்தி கொடுத்தார்கள்.
பொன்மலை ரயில்வே பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர் பி.ராஜேஷ் பொன்குமார் நன்றியுரையாற்றினார்.
விழாவிற்கு ரயில்வே உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள்  மற்றும் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts