• Home
  • தமிழ்நாடு
  • உலக மனநலம் தினத்தை இரு வேறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் வாளாடி மற்றும் தாளக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தமிழ்நாடு

உலக மனநலம் தினத்தை இரு வேறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் வாளாடி மற்றும் தாளக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Email :62

10/10/2025 ஆம் நாளான இன்று உலக மனநல தின நாளான இன்று நமது திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி  கல்லூரியின்சமூக பனித்துறை மற்றும் உன்னத்  பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உலக மனநலம் தினத்தை இரு வேறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் வாளாடி மற்றும் தாளக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

காலை 09:30-10-30 மற்றும் 11:30-12:30 என முறையே இரண்டு இடங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஆத்மா மனநிலை மருத்துவமனையி்லிருந்து

மனநல ஆலோசகர் G.ரம்யா அவர்கள் சிறப்பு விருந்துனராக வந்து இருந்து மாணவர்களுக்கு மனநலம் மற்றும் மன அமைதியை பேணுவதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களை தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எடுத்து கூறினார்.

விழாவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை துறை தலைவர் முனைவர் ஆ.அருண் பிரகாஷ் அவர்கள் வாழ்த்துரை உரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை சமூகப் பணித்துறை உதவி பேராசிரியர் திரு மாதவன் அவர்கள் ஒருங்கிணைத்தார். 200-க்கும் மேற்பட்ட
மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts