“அரசு உயர்நிலைப்பள்ளி, சாக்கவயல் பள்ளியில் விளையாட்டு விழா”
“சாதனை படைக்கும் சாக்கவயல் பள்ளி”.

ஆக்கம்:
எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்
சிவகங்கை, 8 ஜனவரி 2025 – அரசு உயர்நிலைப்பள்ளி, சாக்கவயல் பள்ளியில் விளையாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கபடி, குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திருமதி.விமலா, திருமதி.சந்தான லெட்சுமி (தையல் ஆசிரியை) மற்றும் திரு.ஆறுமுகம் (இளநிலை உதவியாளர்) குழந்தைகளுக்கு வழி காட்டினர்.
குழந்தைகளை விளையாட்டில் ஊக்குவிக்கும் அழகப்பா பல்கலைக்கழகம்:
விளையாட்டுப்போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி பயிலும் மூன்று பயிற்சி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்த உதவினர்.
அந்த கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ப.காளீஸ்வரன் போட்டிகளை வடிவமைத்து வழங்கினார்.
திருமதி முனைவர். ஈஸ்வரி, தலைமை ஆசிரியை, “விளையாட்டுகள் குழந்தைகளின் மொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை உடல், மன, சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்குத் துணைபுரியும்.” என்று கூறினார்
விளையாட்டின் முக்கியத்துவம்:
உடல் ஆரோக்கியம் – உடல் வலிமை மற்றும் சக்தி மேம்படுகின்றன.
மனநலன் – மன அழுத்தம், கவலை குறையுகின்றன. கவனம் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கின்றன.
சமூக வளர்ச்சி – குழு ஒத்துழைப்பு, தொடர்பு திறன்கள் ஊக்குவிக்கின்றன.
குணநலன் – ஒழுக்கம், நேர்மையான நடைமுறைகள் கற்றுக்கொடுக்கின்றன
தன்னம்பிக்கை உருவாக்குகின்றன.
கல்வி முன்னேற்றம் – கவனத்தை அதிகரித்து கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
வாழ்க்கைத் திறன்கள் – தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் மேம்படுகின்றன.
பெற்றோர் பங்கு: குழந்தைகளின் ஆர்வத்தை கண்டுபிடித்து, அவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட உதவவும், மகிழ்ச்சியுடன் விளையாட இடத்தை வழங்கவும் பெற்றோர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இந்த விழா குழந்தைகளுக்கு திறமைகளை மேம்படுத்தும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த நேர்மறையான மனப்பான்மையுடன் வளர வாய்ப்பு வழங்கியது.
நன்றி.















